பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.
Updated on
1 min read

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கும் கட்சி பாஜக. பச்சோந்தி போல அடிக்கடி கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணி மாறுவது திமுகதான்.

திமுக ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துடைய அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணியில் இணையும்.

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்?. நீங்கள் கூட்டணி வைத்தபோது பாஜக நல்ல கட்சி. சாதனை, சாதனை என்று சொல்கிறார் ஸ்டாலின். உதயநிதியை துணை முதல்வராக்கியதுதான் சாதனை.

திமுக 4 ஆண்டுகால ஆட்சியில் ஸ்டாலின் என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். 2026 குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்.

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் காத்துக்கொண்டுள்ளனர். இது என்னுடைய கட்சி. உங்களுக்கு ஏன் கோபம், எரிச்சல் வருகிறது. எங்கள் கூட்டணி வலிமையான, வெற்றிக் கூட்டணி. எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வந்து சேர இருக்கிறது.

இரு கட்சிகளும் மகிழ்ச்சியோடு அமைத்த கூட்டணி இது. எனக்கு மடியில் கணமில்லை, பயமில்லை.

வருமான வரி, அமலாக்கத் துறையை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. 4 ஆண்டு காலத்தில் கொள்ளையடித்ததை மறைத்ததால் அமலாக்கத் துறை, வருமான வரிக்கு பயப்படுகிறீர்கள்.

ஊழல் செய்த பணத்தை என்ன செய்வது என தெரியாமல் உள்ள கட்சிதான் திமுக. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com