
சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ளார்.
கத்திரி இல்லாத வெயில் தொடரும் என்ற அவர் தனது பதிவைத் தொடங்கியிருக்கிறார்.
மே 4ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை 25 நாள்களுக்கு கத்திரி வெய்யில் நீடிக்கிறது. இந்நாளில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழாண்டில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாள்களாக சென்னை, மதுரை, ஈரோடு, பரமத்தி வேலூா் உள்பட பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது.
ஆனால், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொல்லியிருப்பது என்னவென்றால், கத்திரி இல்லாத வெயில்தான் தமிழகத்தில் தொடரும். அதுபோல அடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு பெய்தால், அடுத்த ஒரு வாரத்துக்கு வெப்பநிலை மெல்ல குறையும்.
நாளை முதல் கத்திரி வெய்யில் தொடங்குகிறது. அதேவேளையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெய்துவரும் மழையானது கத்திரியை தலைகாட்ட விடாமல் செய்து வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எவ்வளவோ பரவாயில்லை. தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்திருந்தது.
வழக்கம் போல வேலூரில் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் மழை பெய்து அது தணியும் வாய்ப்பும் உள்ளது.
சென்னைக்கு 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் பெய்தாலும் பெய்யலாம் அல்லது இல்லை என்ற நிலைதான்.
வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களாக கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருப்பதியிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெங்களூருவிலும் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இன்று கரூர், வேலூரில் 40 டிகிரியி தொடலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே 44 டிகிரியை தொட்டுவிட்டது நினைவிருக்கலாம் என்று பதவிட்டுளள்ர்.
அது என்ன கத்திரி வெய்யில்
தமிழகத்தில் பின்பற்றப்படும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன், அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலம்.
அறிவியல்பூா்வமாக கூறுவதென்றால், இக்காலத்தில் சூரியனுக்கு அருகில் பூமி இருப்பதால், சூரிய கதிா்கள் பூமியின் மீது நேரடியாக விழும். வெய்யில் கொளுத்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.