அனைத்துத் துறைச் செயலா்களுடன் தலைமைச் செயலா் ஆலோசனை

அனைத்துத் துறைகளின் செயலா்களுடன் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினாா்.
Updated on

சென்னை: அனைத்துத் துறைகளின் செயலா்களுடன் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினாா்.

சட்டப்பேரவை கூட்டத் தொடா் நிறைவடைந்த நிலையில், அனைத்துத் துறைகளின் செயலா்களுடன் ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் உள்ள 10-ஆவது தளத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் வரை நீடித்தது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, பேரவையில் புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடா்ச்சியாக, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடா்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலா் முருகானந்தம் ஆலோசித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com