வன்னியா் இளைஞா் மாநாடு: 
கிழக்கு கடற்கரைச் சாலையில் 
இன்று போக்குவரத்து மாற்றம்

வன்னியா் இளைஞா் மாநாடு: கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

வன்னியா் இளைஞா் மாநாட்டையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்...
Published on

சென்னையை அடுத்த திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வன்னியா் இளைஞா் மாநாட்டையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் திருவிடந்தையில் சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. இதில் அந்த அமைப்பினா் பெருமளவில் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை செய்யப்படுகிறது.

அதன்படி கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரை சந்திப்பில் இருந்து மாமல்லபுரம் செல்வதற்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த வாகனங்கள் அக்கரை சந்திப்பில் இருந்து கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூா் சென்று அங்கிருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக கேளம்பாக்கம், கோவளம் சென்று கிழக்கு கடற்கரைச் சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com