தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
துணிக்கடையில் தீ விபத்து
துணிக்கடையில் தீ விபத்து
Published on
Updated on
1 min read

சென்னை, தி.நகரின், ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று முற்பகலில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பரவியதைக் கண்டதும் துணிக்கடை பணியாளர்கள் கடையிலிருந்து அலறியடித்து வெளியேறியதால், அனைவரும் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் பல துணி கடைகள் உள்ளன. நாள்தோறும் துணிக்கடை மற்றும் நகைக்கடையில் பொருள்கள் வாங்க லட்சக்கணக்கானோர் வருகை தரும் இடமாகவும் அது உள்ளது.

இந்நிலையில் இன்று காலை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இந்த துணிக் கடை இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட கடையாகும். இந்த கடையில் தான் முதல் தளத்தில் இருக்கக்கூடிய உயர் ரக துணிகளுக்கான தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீ விபத்து
தீ விபத்து

கடையின் முதல் தளத்தில் தீ பரவியதும் கடையில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் உடனடியாக கடையிலிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததும் 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து நாசம் ஆனது. விபத்து குறித்து மேற்கு மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு காரணத்தால் தீப்பிடித்ததாக விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com