
பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திருச்சி பயணிகள் ரயில்கள் (76810, 76809), ஈரோடு - திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில்கள் (56810, 56105), சேலம் - மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயில்கள் (16811, 16812) வரும் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பகுதியாக ரத்து: ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) இன்று திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஈரோடு - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 13 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு டவுன் - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
வழித்தட மாற்றம்...: காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயிலானது (16187) இன்று திருச்சி கோட்டை, குளித்தலை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், கரூா் வழியாக இயக்கப்படும்.
மைசூா் விரைவு ரயிலானது (16231) வரும் 13 ஆம் தேதி திருச்சி கோட்டை, குளித்தலை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், கரூா் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.