
உதகை மலர்க் கண்காட்சியில் மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 'உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க' என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 ஆவது மலர்க் கண்காட்சியை தொடங்கிவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மலர் அலங்காரங்களை பார்வையிட்டார்.
பின்னர் சுமார் 15 ஆயிரம் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் அமர்ந்து தனது மனைவி துர்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மு.பெ. சாமிநாதன், நீலகிரி எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதலில் தனது மனைவி துர்காவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர், கீழே நின்று கொண்டிருந்த தனது அண்ணன் மு.க. தமிழரசுவின் மகள் பூங்குழலியையும் வரவழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டார்.
முன்னதாக கையை அசைக்கும்படி புகைப்படக் கலைஞர்கள் கேட்டுக் கொண்டனர். எந்த மாதிரி அசைக்க வேண்டும் எனக் கேட்ட அவர், உத்தரவிடுவதைப் போல காட்டட்டுமா? அல்லது (உதயசூரியன் சின்னத்தைக் காட்டி) இப்படிக் காட்டலாமா? என்று கேட்டார்.
பின்னர் உதயசூரியன் சின்னத்தைக் காட்டியபடி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
இதைத் தொடர்ந்து பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் உருவங்களைப் பார்வையிட்ட முதல்வர், தாவரவியல் பூங்கா வளாகத்தில் ரூ. 24.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெரணியகத்தை திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
இதையும் படிக்க | உதகை மலர்க் கண்காட்சியை தொடக்கிவைத்தார் முதல்வர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.