50 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு: ராமதாஸ்

வரும் பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்
மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத்தலைவர்களின் கூட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் மேலும் தெரிவித்ததாவது, தமிழகத்தில் பாமக ஆளவேண்டும். அப்போதுதான் மக்கள் வறுமையிலிருந்து மீள்வார்கள். சமூகநீதி நிலைத்து நிற்கும். அதற்காகவே மாமல்லபுரத்தில் பிரமாண்ட கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத்தேர்தலில் பாமக 50 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டும். அதற்கான உக்தியை கற்றுக்கொடுக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டு, பரிமாறி கொள்ளப்படவுள்ளது.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து எதிர்வரும் நாள்களில் வன்னியர் சங்கம் , பாட்டாளி இளைஞர் சங்கம், மகளிர் சங்கம் மற்றும் கட்சியின் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்றார்.

கூட்டத்தில் பாமக கெüரவத் தலைவர் ஜி.கே மணி எம்எல்ஏ , பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் ஏம்எல்ஏ அருள், வன்னியர் சங்க பொறுப்பாளர் ம. க.ஸ்டாலின், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அன்புமணி புறக்கணிப்பு

இக்கூட்டத்தில் அன்புமணி மற்றும் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com