
வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் நீடித்த தொடர் மழையின் காரணமாக சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் பகுதியில் சனிக்கிழமை முன்னிரவில் மேற்கு திசையில் இருந்து வீசிய பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழைப்பொழிவு தொடர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவும் தொடர்ந்த இந்த மழை, திங்கள்கிழமை காலை வரை நீடித்தது.
இந்த மழையின் காரணமாக எள் மற்றும் பயறு வகைப் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி உப்பளப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள உப்பு உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.