அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை: 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு இதுவரை 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.
அமைச்சர் கோவி. செழியன்
அமைச்சர் கோவி. செழியன் கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாள்களில் 1,61,324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரையில் 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:

07.05.2025 அன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டது. இன்று (19.05.2025) மாலை 6 மணி நிலவரப்படி 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

இதில் 46,691 மாணவர்களும், 75,959 மாணவிகளும், 48 மூன்றாம் பாலினத்தவரும் ஆக மொத்தம் 1,22,698 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

SWAMINATHAN

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 27.05.2025 வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 165 உதவி மையங்கள் (Help-Desk) மற்றும் மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டு சேவை மையங்கள் (Admission Facilitation Centre) நிறுவப்பட்டுள்ளன.

அந்தந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-24342911 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது dceofficehelpdesk@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சென்னை மண்டலத்தில் உள்ள கீழ்க்கண்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேவைக்கேற்பவும், வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் தனித்துவமான பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com