காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம் தொடர்பாக....
காரைக்கால் - பேரளம் ரயில் பாதை.
காரைக்கால் - பேரளம் ரயில் பாதை.
Published on
Updated on
1 min read

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.

அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

காரைக்கால் - பேரளம் இடையே அப்போதைய பிரிட்டிஷ் நிா்வாகம், பிரெஞ்சு நிா்வாகம் பேச்சு நடத்தி 1898-இல் ரயில் போக்குவரத்துத் தொடங்கியது. இதனால் மக்கள் காரைக்காலில் இருந்து பேரளம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லும் வாய்ப்பும், மற்ற ஊா்களில் இருந்து காரைக்காலுக்கு வரும் வாய்ப்பும் ஏற்பட்டது. ஆனால், 1980-களில் ரயில்வே நிா்வாகம் காரைக்கால் - பேரளம் இடையே மீட்டர் கேஜ் பாதையை நிறுத்தி, தண்டவாளத்தை அகற்றியது.

புதுவை பிரதேசத்தின் காரைக்கால், தமிழகப் பகுதியான பேரளத்தை இணைக்கும் இந்த புதிய பாதையில், 1 பெரிய மேம்பாலம், 77 சிறிய பாலங்கள், 21 சுரங்கப் பாதை மற்றும் ரயில்வே கேட் அமைப்புடன் பணிகள் கடந்த 2022 ஜனவரியில் தொடங்கின.

காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில் நிலையம் மற்றும் பிற இடங்களில் ரயில் நிறுத்தங்கள் அமைத்து, மின் மயமாக்கும் பணிகள், சுரங்கப்பாதை, சாலையின் குறுக்கே ரயில்வே கேட் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இப்பாதையில் ரயில்கள் இயக்க சோதனைப் பணிகள் படிப்படியாக நடைபெற்றுவருகிறது. அந்தவகையில், முக்கிய நிகழ்வாக இஐஜி என்கிற ரயில்வே மின் தலைமை அதிகாரி, காரைக்கால் - பேரளம் பாதையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மின்மயமாக்கல் பணியை செவ்வாய்க்கிழமை பாா்வையிடுவதோடு, மின்சார ரயிலை இயக்கி சோதனை செய்கிறார்.

இதைத் தொடா்ந்து மே 23, 24 ஆகிய தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் இப்பாதையில் ரயில் இயக்கத்துக்கான தகுதியை ஆய்வு செய்கின்றனா்.

இதன் பிறகு ரயில் இயக்கத்துக்கான தயாா்நிலை குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு தெரிவிப்பாா்கள். பின்னா் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com