தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்? விளக்கம் அளிக்க உத்தரவு!

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய நிதி வழங்காதது குறித்து....
HighCourt
HighCourt
Published on
Updated on
1 min read

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீடு இடங்களுக்கு, தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25% இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாரயணன் அமர்வு முன் இன்று(மே 22) நடைபெற்றது. தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த இடங்களுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. 2021 முதல் 2023 ஆம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. வரும் மே 28 ஆம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது” என்று வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை நாளை பிற்பகல் 2.15 மணிக்குள் மத்திய அரசு சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிக்க: பிரபலங்கள் விவாகரத்து: பிரேமலதா சொல்லும் அறிவுரை என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com