

நாகர்கோயிலில் டெய்லருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரைக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு அருகே செல்வம் என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமையில் அவரது கடையில் கத்தரிக்கோலால் குத்தி, கொலை செய்யப்பட்ட நிலையில், செல்வத்தின் உடல் மீட்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கொலை செய்தவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், செல்வத்தின் கடைக்கு ஒருவர் வந்து செல்வது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்தான் செல்வத்தை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்பதும், செல்வத்திடம் அவர் பேன்ட் தைக்கக் கொடுத்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில்தான், பேன்ட்டை சரியாகத் தைக்காததாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்வத்தின் தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் சந்திரமணி கத்தரிக்கோலால் குத்திவிட்டு, தப்பியோடியது தெரிய வந்தது.
செல்வம் கொலையுண்ட சில மணிநேரங்களிலேயே குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.