

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மூலம் இன்று காலை 9.50 மணியளவில் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
முந்தைய ஆண்டுகளில் நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்துக்கு தேவையான நிதி குறித்து முறையிடப் போவதாக ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார்.
இந்த கூட்டத்தை முடித்துவிட்டு தில்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.