

தில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் வைகை தமிழ்நாடு இல்லத்தின் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னா் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடைகிறாா்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை 9.50 மணியளவில் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், பி.வில்சன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார், ஆகியோர் சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து சோனியா, ராகுலுடன் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.