அரசு விரைவுப் பேருந்து
அரசு விரைவுப் பேருந்துகோப்புப்படம்.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த 23 சொகுசு பேருந்துகள்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதனப் பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
Published on

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதனப் பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் ஐந்தாவது ஆண்டின் தொடக்கவிழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர், கடந்த 07.05.2025 அன்று சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!

இப்பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 27 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, முதல்வரின் உத்தரவுப்படி போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் சி.சிவசங்கரின் அறிவுறுத்தல்படி, இன்று ( 23.05.2025) முதல் 23 புதிய அதி நவீன குளிர்சாதன பேருந்துகள் கீழ்கண்ட தடங்களில் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com