
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆர்வம் கடந்தாண்டைவிட, நடப்பாண்டு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.43 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கடந்தாண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் தற்போது வரை 2.43 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க இன்னும் 12 நாள்கள் உள்ளன நிலையில், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு உள்ளது: உயர் நீதிமன்ற கிளை கருத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.