ஜூலை மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்!

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது குறித்து...
 குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.
குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.
Updated on
1 min read

ஜூலை மாதம் இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள லஸ் நிழற்சாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பாக ரூ. 8.25 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு மையத்திற்கான பூமி பூஜையில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு இந்த மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் செயலாளர் கார்கலா உஷா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

சென்னை நகரத்தில் பெறப்படக்கூடிய வருவாய் இந்த மாநகரத்தில் உள்ள குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக 182 திட்டப்பணிகள் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.

தென் சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விளையாட்டு அரங்கள், பூங்காக்கள், சமுதாய நலக்கூடங்கள், நூலகங்கள், படைப்பகங்கள் என பல்வேறு பணிகள் துவக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் அனைத்து பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜூலை மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்று விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com