அமாவாசை, கிருத்திகையில் தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?

அமாவாசை, கிருத்திகையில் தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம் சொல்வது பற்றி
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்
Published on
Updated on
1 min read

சென்னை: இன்று வைகாசி அமாவாசையும், கிருத்திகையும் ஒன்று சேர்ந்து வந்துள்ளது. இன்றைய நாளில் தங்கம் வாங்கலாமா என்பது பலரது கேள்வியாக இருக்கலாம். ஆனால் விலை நிலவரம் என்னவோ வாங்கலாம் என்று தான் சொல்கிறது.

காரணம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளதுதான்.

மே 26ஆம் தேதி திங்கள்கிழமை காலை, வணிகம் தொடங்கியதும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.78,112 ஆக உள்ளது.

அதுபோல, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.40 குறைந்து ரூ.8,950க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து நான்கு நாள்களாக அதாவது மே 23ஆம் தேதி முதல் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111 ஆகவே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com