
தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் காற்றாலை மூலமாக 3,253 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3,253 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டின் அதிகபட்ச மின்தேவை 13,905 மெகா வாட்டாக இருந்தது.
இதனால் கோடையில் மின் பற்றாக்குறை ஏற்படாது என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவை அதிகரிக்கவில்லை என்றும் காற்றாலை மின் உற்பத்தி முன்கூட்டியே தொடங்கியிருப்பதால் மின் பற்றாக்குறை ஏற்படாது என்றும் அமைச்சர் சிவசங்கர் சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.