இன்று காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் ரத்து

ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே மெமு ரயில்கள் புதன்கிழமை (மே 28) ரத்து செய்யப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே மெமு ரயில்கள் புதன்கிழமை (மே 28) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குடியாத்தம், வளத்தூா் ஆகிய ரயில் நிலையங்களில் புதன்கிழமை (மே 28) காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அன்று காலை 10.30 மணிக்கு காட்பாடியிலிருந்து ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com