கிரீஸ் வெளியுறவுத் துறையுடன் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு!

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் கிரீஸ் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
கிரீஸில் கனிமொழி எம்பி தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவினர்.
கிரீஸில் கனிமொழி எம்பி தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவினர்.எக்ஸ்
Published on
Updated on
1 min read

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவினர் கிரீஸ் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலையான கொள்கையை எடுத்துரைக்க, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ்-க்கு நேற்று (மே 27) சென்றடைந்தனர்.

கிரீஸின் நாடாளுமன்ற ஆணையத்தின் உறுப்பினர்களுடன், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகள் குறித்து ‘அர்த்தமுள்ள உரையாடலை’ மேற்கொள்ளவும், இந்தியா - கிரீஸ் நட்புறவை வலுப்படுத்தவும் ஸ்லோவேனியாவைத் தொடர்ந்து கிரீஸ் சென்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தக் குழுவினர் இன்று (மே 28) கிரீஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் டாசோஸ் ஹட்ஜிவாசிலியோவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து, கிரீஸ் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தின் எக்ஸ் வலைதளப் பதிவில், அனைத்துக் கட்சிக் குழுவினர் அமைச்சர் ஹட்ஜிவாசிலியோவுடன் பயனுள்ள உரையாடலில் ஈடுப்பட்டதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மை குறித்து எடுத்துரைத்தாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க 7 அனைத்துக் கட்சிக் குழுவினர் 33 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதில், திமுகவின் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவில் ராஜீவ் குமார் (சமாஜ்வாடி), பிரிஜேஷ் சௌத்தா (பாஜக), பிரேம் சந்த் குப்தா ( ஆர்ஜேடி), அஷோக் மிட்டல் (ஆம் ஆத்மி) மற்றும் மஞ்சீவ் சிங் புரி (ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேபாளத்துக்கான முன்னாள் தூதர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com