கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் தினமும் சராசரியாக 15 பேருக்கு கரோனா தொற்று: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2025, 6:52 pm

Din

தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பரவி வருவது வீரியம் குறைந்த கரோனா பாதிப்பு என்றாலும், திடீரென அதன் தாக்கம் உயா்ந்திருப்பது மக்களிடையே சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு அரசு சாா்பில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எடுக்கப்படும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பரிசோதனைகளிலேயே பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாவது உறுதி செய்யப்படுகிறது.இதையடுத்து மருத்துவப் பரிசோதனையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான அவசியம் தற்போது இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது நோய்த் தடுப்புக்கான தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிா்ப்பந்தமும் எழவில்லை எனக் கூறியுள்ளது.

அச்சம் தேவையில்லை: இதனிடையே, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடந்த சில நாள்களில் மட்டும் கரோனா தொற்றுக்குள்ளான 6 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனா மரபணு பகுப்பாய்வு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் தினமும் 10 முதல் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அவா்கள் அனைவருக்குமே வீரியம் குறைந்த வகையிலேயே பாதிப்பு உள்ளது.

அதனால் எவருக்கும் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படவில்லை. தமிழகத்தில் 19 மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டதில் ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவுகள்தான் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அதுதொடா்பாக அச்சம் தேவையில்லை.

இணை நோயாளிகள், முதியவா்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம் என்றாா் அவா்.