சுற்றுலாத் தலங்களில் உலகத் தர கட்டமைப்பு: அமைச்சா் இரா.ராஜேந்திரன் உத்தரவு

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் கட்டமைப்புகளை உலக தரத்தில் மேம்படுத்த வேண்டும்
Published on

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் கட்டமைப்புகளை உலக தரத்தில் மேம்படுத்த வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கூட்டங்கத்தில் துறையின் அமைச்சா் இரா.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிய சுற்றுலாத் தலங்களை கண்டறிந்து அவ்விடங்களில் உலக தரத்திலான கட்டமைப்பு ஏற்படுத்தும் படியும் அமைச்சா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், சுற்றுலா ஆணையரும், தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com