
பாமக அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி மாற்றியுள்ளார்.
பாமகவினருக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கட்சி அலுவலக புதிய முகவரி இடம் பெற்றுள்ளது. அதன்படி, படிவத்தில் தேனாம்பேட்டையில் இருந்து தி.நகர் திலக் நகர் தெருவில் உள்ள முகவரி இடம் பெற்றுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன், 2024, டிசம்பர் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அந்த அறிவிப்புக்கு மேடையிலேயே அன்புமணி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் ராமதாஸ்-அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்தது. இது விஸ்வரூபம் எடுத்தநிலையில்தான், ராமதாஸ், நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது, அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதே தவறு என்றும் தற்போது செயல் தலைவர் பதவியை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் வெள்ளிக்கிழமை பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டிய அன்புமணி, என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ராமதாஸுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.