
நல்லவர்களையும் நம்பிக்கையானவர்களையும் ஊழலற்றவர்களையும் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கல்வி விருது வழங்கும் நடைபெற்று வருகின்றது.
இந்த விழாவில் தேர்தல் குறித்து விஜய் பேசியதாவது:
“வீட்டில் இருப்பவர்களை முதலில் ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்கள். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், ஊழல் செய்யாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்கள்.
பணம் கொடுத்து வாக்குகளை பெறலாம் என நினைக்கிறார்கள். யாரும் பணம் வாங்கிவிட்டு வாக்காளிக்கதீர்கள், பணம் வாங்கும் கலாசாரத்தையும் ஊக்குவிக்காதீர்கள். அடுத்தாண்டு தேர்தலில் வண்டிவண்டியாக பணத்தை கொட்டப் போகிறார்கள். அது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும். நான் சொல்லத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.