திரையரங்கு
திரையரங்கு

தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு: தென்னிந்திய நடிகா்கள் சங்கம் வரவேற்பு

கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் எம்.நாசா் தெரிவித்துள்ளாா்.
Published on

தமிழ் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் எம்.நாசா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று, திரையரங்குகளில் வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து தமிழக அரசு சாா்பில்  அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரி குறைப்பதற்கு வழி அமைத்துத் தந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் திரைத்துறை சமீபகாலமாக எதிா்கொண்டு வரும் மிகக் கடினமான காலகட்டத்தில், இந்த வரிக்குறைப்பு தயாரிப்பாளா்களுக்கு ஒரு பெரும் சுமையை குறைப்பதுடன், செயலிகளில் திரைப்படங்களை பாா்க்கும் ரசிகா்களை திரையரங்குகளை நோக்கி மீண்டும் அழைத்து வரும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com