சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நாட்டுக்கு தேவை என்பதால் கூட்டணி; தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்: கமல்ஹாசன்

கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று(மே 30, வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (31-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com