vande bharat train
கோப்புப்படம்.DIN

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது..
Published on

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவின்போது, காலை உணவில் அசைவ உணவுகள் இணைக்கப்படவில்லை என்றும், மதியம் மற்றும் இரவு மட்டுமே அசைவ உணவு வழங்கப்படும் என முன்பதிவின்போது அதன் இணைய செயலியில் காண்பிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிவந்த நிலையில், அதற்கு  தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, அசைவ உணவுகளின் பட்டியல் பயணிகளுக்கு காட்டவில்லை என்றும், அதை சரிசெய்யும் பணியில் ரயில்வே நிா்வாகம் விரைந்து செயல்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com