'மங்காப் புகழொளியைத் தமதாக்கிக் கொண்ட மாமன்னர் ராஜராஜ சோழன்'- மு.க.ஸ்டாலின் புகழாரம்

ராஜராஜ சோழனின் சதய விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
Chief Minister M.K. Stalin's post on the centenary celebration of Rajaraja Chola
ராஜராஜ சோழனுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதைX / Thanjavur collector
Published on
Updated on
1 min read

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாமன்னன் இராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ராஜராஜ சோழன் விழா குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழர்களின் கலைத்திறன், போர்த்திறன், கப்பற்கலை, பாசனமுறை என அனைத்தின் உச்சமாக ஆட்சிசெய்து மங்காப் புகழொளியைத் தமதாக்கிக் கொண்ட மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா இன்று!

தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்றுமுதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், தஞ்சை மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர, சதய விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பெருமையாக அவர் நமக்காக விட்டுச் சென்றுள்ள பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, மாமன்னர் இராசராச சோழன் புகழ் போற்றுவோம்!" என்றும் பதிவிட்டுள்ளார்.

Summary

Chief Minister M.K. Stalin's post on the centenary celebration of Rajaraja Chola

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com