

இரண்டு முறை முதல்வராகும் வாய்ப்பு வந்தும் கட்சிக்காக விட்டுக்கொடுத்தேன் என செங்கோட்டையன் பேசியதற்கு திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
தேவர் ஜெயந்திக்காக மதுரையில் வங்கியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தங்க கவசத்தை மீண்டும் ஒப்படைத்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியில், "செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னால் பிறந்தவர். அந்த ஒரு தகுதியைத் தவிர அதிகமான தகுதி கொண்டவர் இபிஎஸ்.
யாராவது முதல்வர் வாய்ப்பு வந்தால் விட்டுக் கொடுப்பார்களா. வந்த வாய்ப்பை எதற்கு விட வேண்டும்? இது தெய்வத்தின் தீர்ப்பு. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்து கொடநாடு வழக்கு நடக்கிறது. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை சிறையில் போடாமல் ஏன் இருக்கிறார்கள்?
சட்டப்படி பொதுக்குழு கூட்டி நீக்கப்பட்டவர் ஓபிஎஸ். சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் ஒரு மாதத்திற்குள் என்ன ஆகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். மீண்டும் அவர்களை சேர்க்க முடியாது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் இருக்கும் தொண்டர்கள் மன்னிப்பு கேட்டால், ஆலோசித்து சேர்க்கப்படும்.
இவர்களால் அதிமுகவிற்கு எந்த பலவீனமும் கிடையாது. நாங்கள் ஸ்டெடியாக இருக்கிறோம். முதல் கோணல் முற்றிலும் கோணல். செங்கோட்டையன் அதிமுகவில் ராஜாவாக இருந்தார் தற்போது அவரிடம் கூஜா தூக்கி வருகிறார். செங்கோட்டையன் இனி மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்க்க முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.