புதிய '108 ஆம்புலன்ஸ்' சேவைகளை தொடக்கிவைத்தார் முதல்வர்!

புதிய '108 ஆம்புலன்ஸ்' ஊர்திகளின் சேவைகளை தொடக்கிவைத்த முதல்வர்...
MK stalin launches new 108 ambulance services
'108 ஆம்புலன்ஸ்' சேவைகளை தொடக்கிவைத்த முதல்வர்DIPR
Published on
Updated on
2 min read

சென்னையில் 87 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

சென்னையில் ரூ.18.9 கோடி மதிப்பீட்டில் 87 புதிய 108 அவசர கால ஊர்திகள் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவைகளை முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.

மேலும் நிகழ்வில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (1.11.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 18 கோடியே 90 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

‘108’ அவசரகால ஊர்தி சேவையானது 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசானது EMRI GHS என்ற தனியார் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையை வழங்கி வருகிறது. இச்சேவை 24x7 மணி நேரம் என்ற சேவையின் அடிப்படையில், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அவசரகால மருத்துவ தேவைக்கு “108“ என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுகின்றனர்.

அவசரகால நெருக்கடியின் போது தேவையான மருத்துவ உதவியை எளிதாகவும், உடனடியாகவும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வழங்க, தற்போது 1,353 எண்ணிக்கையிலான ‘108’ அவசரகால ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 977 - அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள், 307 - மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகள், 65 - பச்சிளங்குழந்தைகளுக்கான ஊர்திகள் உள்ளிட்ட ஊர்திகள் அடங்கும்.

இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை '108' அவசரகால ஊர்திகளின் சேவை மூலம் கருவுற்ற தாய்மார்கள், சாலை விபத்துகளில் காயமுற்றோர், இதர அவசரகால மருத்துவ தேவைகள் என மொத்தம் 85,98,054 மருத்துவ பயனாளிகள் பயன்பெற்று உள்ளனர். இவைத்தவிர, 41 இரு சக்கர வாகன அவசரகால ஊர்திகள் மூலம் 1,61,688 மருத்துவ பயனாளிகளும், பச்சிளங்குழந்தைகளுக்கான சேவை மூலம் 95,119 மருத்துவ பயனாளிகளும், பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் 4,30,697 மருத்துவ பயனாளிகளும் பயன்பெற்றுள்ளார்கள்.

'108' அவசரகால ஊர்திகளின் சேவையை மேலும் செம்மையாக செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 18 கோடியே 90 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை இன்றைய தினம் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் மரு.சு.வினீத், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Summary

MK stalin launches new 108 ambulance services

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com