

மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழ்நாடு நாளையொட்டி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!
மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடந்த கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்துப் பேசினார்.
இதன்பின்னர் அவர் தொடர்ச்சியாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.