

துணை முதல்வர் உதயநிதிக்கே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருள் சரியாகத் தெரியவில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
திமுகவின் உண்மை வேஷம் வெளிச்சமானது!….
தேர்தல் ஆணையம் (@ECISVEEP) நடத்தி வரும் “SIR – Special Intensive Revision” (சிறப்பு தீவிர திருத்தம்) என்ற செயல்முறையை, தமிழக துணை முதல்வர் உதயநிதி “Special Intensive Registration” (சிறப்பு தீவிர பதிவு) எனத் தவறாக குறிப்பிடுகிறார்.
அவருக்கே “SIR” என்பதன் பொருள் சரியாகத் தெரியவில்லை என்றால், இதன் உண்மையான செயல்முறையும் அவருக்கு தெரியாது என்பதில் ஐயமில்லை.
இருந்தாலும் இதை அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்க்கின்றனர்.
🔹 SIR செயல்முறை நோக்கங்கள்:
1️⃣ புதிய வாக்காளர்கள் (18 வயது நிறைவு பெற்றவர்கள்) சேர்த்தல்
2️⃣ மரணமடைந்தவர்களின் பெயர்கள் நீக்குதல்
3️⃣ இரட்டை வாக்குரிமை இருந்தால் அவற்றை அகற்றுதல்
இந்த செயல்முறை முழுவதும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.
நடைமுறை அட்டவணை:
📍 நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை — வீடு தோறும் சரிபார்ப்பு நடைபெறும்
📍 டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 (2026) வரை — எதிர்ப்புகள் மற்றும் திருத்தங்கள் பெறப்படும்
📍 டிசம்பர் 9 முதல் ஜனவரி 31 வரை — புகார்கள் விசாரிக்கப்படும்
(அந்த நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் சந்தேகங்களையும் எதிர்ப்புகளையும் விளக்கிக் கொள்ளலாம்)
இறுதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் — 2026 பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.
இந்த “SIR” செயல்முறை தமிழகத்தில் மட்டும் அல்ல, மொத்தம் 12 மாநிலங்களில் நடைபெறுகிறது — அதில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களும் உள்ளன.
ஆனால் திமுக க்கு இந்த வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு செயல்முறை பிடிக்கவில்லை.
ஏனெனில் அவர்கள் எப்போதும் தவறான வாக்காளர் பட்டியல்முறைகேடுகளால் வெற்றிபெறும் கட்சி.
அவர்களே! சமீபத்தில் திமுக தீவிர முயற்சியால் சேர்த்த போலி வாக்காளர்களை, தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இந்த தீவிர திருத்தம் கண்டுபிடித்து அகற்றிவிடும் என்பதாலே அவர்கள் SIR கண்டு பயப்படுகின்றனர்.
திமுக இந்த அரசியலமைப்பு சார்ந்த சட்டபூர்வ செயல்முறையை குழப்ப வேண்டாம்!
திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் சர்வ கட்சி கூட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகம்!.. SIR கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்?
மடியில் கணம் இருந்தால் தானே பயப்பட வேண்டும்!
திமுக? ஏன் ஓடி ஒளிய வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.