

விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி திங்கள்கிழமை வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒரு கோடியே 20 லட்சம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடியே 20 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த உதயநிதிக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பிலும், மாவட்ட திமுக சார்பிலும் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் காமராஜர் தங்கிய நினைவு இல்லத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதையடுத்து ராணிப்பேட்டை ஜிகே உலக பள்ளியில் இறகு பந்து உள்விளையாட்டரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 72880 பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.68.7 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் கைத்தறி மற்றும் பிரிவுகள் துறை அமைச்சர் ஆர். காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஆற்காடு எம்எல்ஏக்கள் ஜெ. எல். ஈஸ்வரப்பன்,ஏ.எம். முனிரத்தினம் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.