கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் மற்றும் அப்பகுதி மக்களிடம் ஒரு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு குழுவினர் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.