கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக எஸ்ஐடி குழுவிடமிருந்து ஆவணங்களைப் பெற்ற சிபிஐ அதிகாரிகள் அது தொடர்பான விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து கடந்த 4 தினங்களுக்கு முன்பாக சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் 3டி டிஜிட்டல் ஸ்கேனர் உதவியுடன் அளவீடு செய்யும் பணியை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் சாட்சிகள் தொடர்பான விசாரணையை நடத்தி வருகின்றனர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ்குமார், சிபிஐ வழக்குரைஞர், ஆய்வாளர் மனோகரன் ஆகிய மூவரும் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் ஆவணங்களுடன் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ன் நீதிபதி சரத்குமாரை தனி அறையில் சந்தித்தனர்.
சுமார் கால் மணி நேரம் சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றனர். வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களைக் கேட்டும் ஆவணங்கள் சரி பார்ப்பதற்காகவும் நீதிபதியைச் சந்திக்க வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.