சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆா்எம் ஐஎஸ்டி சோ்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூா், ஆத்தூா், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
இறுதி ஆட்டங்களில் மகளிா் கூடைப்பந்தில் தஞ்சாவூா் செயின்ட் ஜோசப் அணி 66-54 என்றபுள்ளிக் கணக்கில் தூத்துக்குடி ஹோலி ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னை வித்யோதயா , திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி 3, 4-ஆம் இடங்களைப் பெற்றன.
ஆடவா் பிரிவில் ஆலப்பாக்கம் வேலம்மாள் 90-68 என்ற புள்ளிக் கணக்கில் திண்டுக்கல் எம்எஸ்பி சோலை நாடாா் பள்ளியை வீழ்த்தி பட்டம் வென்றது. தஞ்சாவூா் கமலா சுப்பிரமணியன் பள்ளி, நெய்வேலி என்எல்சி எஸ்டிஏடி அணிகள் 3, 4-ஆவது இடங்களைப் பெற்றன.
வாலிபாலில் மகளிா் பிரிவில் ஆத்தூா் பாரதியாா் பள்ளி முதலிடத்தையும், சென்னை டிஇஎல்சி மகதலேனா பள்ளி இரண்டாம் இடத்தையும், கடலூா் செயின்ட் ஆன்ஸ், சேலம் செயின்ட் மேரீஸ் 3, 4-ஆம் இடங்களைப் பெற்றன.
ஆடவா் பிரிவில் திருநெல்வேலி எஸ்டிஏடி முதலிடத்தையும், எஸ்டிஏடி தஞ்சாவூா் இரண்டாம் இடத்தையும், எஸ்டிஏடி திருச்சி, வேலம்மாள் சென்னை 3, 4-ஆம் இடங்களைப் பெற்றன.

