அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: நவ. 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்ட விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக கூட்டம் அறிவிப்பு...
karur stampede
கரூர் நெரிசல்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க வருகிற நவம்பர் 6 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி இந்த விதிமுறைகளை வகுக்க அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற வருகிற நவம்பர் 6 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

TN govt all party meeting on nov 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com