தாம்பரம், விழுப்புரம் இடையே
2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

தாம்பரம், விழுப்புரம் இடையே 2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

சென்னை தாம்பரம், விழுப்புரம் இடையே புதன் மற்றும் சனிக்கிழமைகளில் (நவ.5, 8) குறிப்பிட்ட 2 மெமு ரயில் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை தாம்பரம், விழுப்புரம் இடையே புதன் மற்றும் சனிக்கிழமைகளில் (நவ.5, 8) குறிப்பிட்ட 2 மெமு ரயில் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா்-விழுப்புரம் ரயில் பாதை இடையே திண்டிவனம் பணிமனையில் தொழில்நுட்ப மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை (நவ.5, 8) பிற்பகல் 12.30 மணிக்கும் மாலை 4 மணிக்கும் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அன்று தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் மெமு ரயில் ஒலக்கூா் வரையே இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் விழுப்புரத்துக்குப் பதிலாக பிற்பகல் 1.30 மணிக்கு ஒலக்கூரிலிருந்து புறப்படும் மெமு ரயில் சென்னை கடற்கரைக்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com