கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்
செய்தியாளர் சந்திப்பில் சி.பி. ராதாகிருஷ்ணன்
செய்தியாளர் சந்திப்பில் சி.பி. ராதாகிருஷ்ணன்படம் - DNS
Published on
Updated on
1 min read

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை பிளிச்சி கிராமத்தில் நடைபெறும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்பதற்காக கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையைத் தருகிறது.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதும் காவல் துறையின் பொறுப்பு. காவல் துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட சகோதரிக்கும் அவரது பெற்றோர்க்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இது நடக்க கூடாததுதான், சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது.

வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

Summary

Maximum punishment for Coimbatore sex offenders: C.P. Radhakrishnan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com