

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் பாடத்துக்கு முதல்முறையாக தேர்வு அறைக்குள் கால்குலேட்டர் அனுமதிப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று (நவ. 4) வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வுக்கு முதன்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
மாணவர்கள் பொதுத் தேர்வை அச்சமின்றி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கான தேர்வல்ல, ஆசிரியர்களுக்கான தேர்வும்கூட. மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயார் ஆகுங்கள். இம்முறை அதிக மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2(12 ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26 ஆம் வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப். 9 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர்" என்றார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள் கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தாண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி கணக்குப்பதிவியல் பாடத்தை எடுத்து பயின்று வரும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: 10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.