அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி
தமிழ்நாடு
இன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலா்களும் பங்கேற்கும்படி அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தல் வியூகம், கூட்டணி உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது.
எம்ஜிஆா் காலத்து அரசியல்வாதியான முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாவட்டச் செயலா்கள் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.