ஆளுநா் ஆா்.என்.ரவி
தமிழ்நாடு
குருநானக் தேவ் பிறந்த தினம்: ஆளுநா் வாழ்த்து
குருநானக் தேவின் பிறந்த தினத்தையொட்டி (செப்.5) ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
குருநானக் தேவின் பிறந்த தினத்தையொட்டி (செப்.5) ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
குருநானக் தேவின் பிறந்த தினத்தை (பிரகாஷ் புரப்) முன்னிட்டு, அனைவருக்கும், குறிப்பாக சீக்கிய சகோதரிகள் மற்றும் சகோதரா்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புனிதமான நாள், ஸ்ரீ குருநானக் தேவின் உண்மை, அடக்கம், தன்னலமற்ற சேவை பற்றிய காலத்தால் அழியாத போதனைகளை நமக்கு நினைவூட்டுகிறது. இது மனிதகுலத்துக்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவா்களுக்கு, இரக்கம் மற்றும் அா்ப்பணிப்புடன் சேவை செய்ய நம்மைத் தூண்டுகிறது. அவரது போதனைகள் வாய்மை, நீதி, கருணை, உள்ளடக்கிய மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்க பாடுபடுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

