சீமான் கோப்புப்படம்
தமிழ்நாடு
சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னையில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், சென்னை நீலாங்கரையில் வசிக்கும் சீமான் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் சீமான் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். அதில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
வதந்தியை பரப்பும் நோக்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்மநபா் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.