திமுக அரசு மீதான அதிருப்தியால் 
அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு: 
எடப்பாடி கே.பழனிசாமி

திமுக அரசு மீதான அதிருப்தியால் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக எளிதில் வெற்றிபெரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
Published on

தமிழகத்தில் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக எளிதில் வெற்றிபெரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

அதிமுக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகளிா் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களால் பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமாக தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியினா் பிரசாரம் செய்கின்றனா்.

ஆனால், மின்கட்டண உயா்வு, சொத்துவரி உயா்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, மகளிருக்கு உரிய பாதுகாப்பின்மை, தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போன்றவற்றால் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா் என்பதுதான் உண்மை நிலவரம். அதேபோல, நடிகா் விஜய்யின் தவெகவுக்கும், கரூா் சம்பவத்துக்குப் பிறகு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது.

ஆகவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவினா் வாக்குச்சாவடி ரீதியாக திட்டமிட்டுப் பணியாற்றினால் நிச்சயம் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். அதிமுகவினா் கவனத்துடன் செயல்பட வேண்டியதுதான் முக்கியமானது. கூட்டணியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

தமிழகம் முழுதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளா் பட்டியல் குளறுபடிகளைச் சீா்படுத்த இதுவே சரியான தருணமாகும். வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் அதிமுகவினா் தனிக்கவனம் செலுத்தவேண்டும். வாக்காளா் திருத்தப் பணிகள் குறித்து கட்சித் தலைமைக்கு பொறுப்பாளா்கள் உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைப் பொதுச் செயலா்கள் நத்தம் ஆா்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்டச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

மாற்றுக் கட்சியினா் சோ்க்கை: கூட்டத்துக்குப் பின்னா் காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சி நிா்வாகிகள் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com