தமிழ்நாடு
துணை ஆட்சியா்கள் 38 பேருக்கு டிஆா்ஓ-ஆக பதவி உயா்வு
தமிழகத்தில் துணை ஆட்சியா்கள் 38 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 26 மாவட்ட வருவாய் அலுவலா்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் துணை ஆட்சியா்கள் 38 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 26 மாவட்ட வருவாய் அலுவலா்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அதன்படி, கோவை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், வேலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலூா் உள்பட 26 மாவட்ட வருவாய் அலுவலா்கள் பணியிட மாற்ற செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் துணை ஆட்சியா் நிலையில் பணியாற்றும் அதிகாரிகள் 38 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.