5,000 பேருக்கு அதிகமான அரசியல் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு! - அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்மொழிவுகள்

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்மொழியப்பட்டவை..
All party meeting for political meetings Guidelines
அனைத்துக் கட்சி கூட்டம்
Published on
Updated on
1 min read

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்படி, அனைத்து கட்சிகளுக்கும் குறைந்தது 5 நாள்களுக்கு முன்னதாக அனுமதி வழங்கப்படும்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக 2 மணி நேரத்திற்கு மேல் மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

சாலை வலம், பொதுக்கூட்டங்களை 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

சாலை வலம் நடத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலை அல்லது உள்ளாட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.

கூட்டத்திற்கு டெபாசிட் தொகையாக அதிகபட்சம் ரூ. 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேதங்கள் ஏற்பட்டால் ஈடு செய்யும் வகையில் இந்த தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 5,000 பேருக்கு மேல் வரும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

5000 -10,000 பேர் இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.

10,000 முதல் 20,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 3 லட்சம்

20,000 - 50,000 பேர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 5 லட்சம்

50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ. 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி, ஒரே இடத்தை ஒன்றுக்கும் அதிகமானோர் கேட்டால் யார் முதலில் அனுமதி கோருகிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை போன்ற விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த விதிகளுக்கு கட்சிகள் தங்களுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Summary

All party meeting for political meetings Guidelines

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com