என் கட்சியினர் மீது சுண்டுவிரல் பட்டாலும் காரணம் அன்புமணிதான்: ராமதாஸ் பேட்டி

பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி
PMK Ramadoss press meet
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் IANS
Published on
Updated on
1 min read

என் கட்சியினர் மீது இனி சுண்டுவிரல் பட்டாலும் அதற்கு அன்புமணிதான் காரணம் என்று பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"என்னைவிட்டு பிரிந்து ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு கத்தி, அரிவாளை எல்லாம் வைத்திருக்கிறார்.

சேலம் மாவட்டச் செயலாளர் அருள் நல்லவேளையாக தப்பி பிழைத்தார். ஆனால், காரை அடித்து உடைத்துள்ளனர். துக்கம் விசாரிக்க சென்றவர்களை அடித்துள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவா நாகரீக வளர்ச்சிக்கான அரசியல்? இதுவா கட்சியை வலுப்படுத்தும்?

உன்னை(அன்புமணி) அமைச்சர் ஆக்கினேன், மத்திய அமைச்சர், எம்.பி. என இறுதியில் கட்சியின் தலைவர் ஆக்கினேன். ஆனால் எல்லாம் வீணாகிவிட்டது, பெரிய தவறு செய்துவிட்டேன் என்று இப்போது நினைக்கிறேன்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், அனால் இறுதியில் தர்மமே வெல்லும். நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நீ(அன்புமணி) ஒரு கட்சி ஆரம்பித்துக்கொள், உனக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை என்றால் நான் ஒரு பெயரைச் சொல்கிறேன். உன் கும்பலை சேர்த்துக்கொள். இனிமேல் எங்கேயாவது என்னுடைய கட்சியினர் மீது சுண்டுவிரல் பட்டாலும் அன்புமணியும் அவருடைய மனைவியும்தான் காரணம். அன்புமணியும் அவரது கும்பலும் திருந்த வேண்டும்" என்று பேசினார்.

Summary

If my party members are attacked, it is because of Anbumani: PMK Founder Ramadoss press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com