

செங்கோட்டையன் விவகாரத்தில் பின்னணியில் திமுக உள்ளதோ என்கிற சந்தேகம் உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பாஜகதான் தன்னை அழைத்தது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செங்கோட்டையன் விவகாரத்தில் பின்னணியில் திமுக உள்ளதோ என சந்தேகம் உள்ளது.
காரணம் நேற்று முன்தினம்தான் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். அதனால் அந்த சந்தேகம் எழுகிறது. செங்கோட்டையன் பாஜகவில் யாரைப் பார்த்தார். என்ன பேசினார் என்று தெளிவான தகவல் இல்லை. 6 பேர் சென்றதாக சொல்கிறார். அந்த 6 பேர் யார். செங்கோட்டையன் பேட்டியை முழுசாக பார்த்தால் தெரியும்.
உலகத்திலேயே பெரிய கட்சி பாஜக. விஜய் கட்சியில் ஒரு கவுன்சிலர்கூட கிடையாது. அப்படியில் தவெகவுக்கும், திமுகவுக்குத்தான் போட்டி எனக் கூறுவது விந்தையாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.